search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஸ்தூரி ராஜா"

    கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டி முனி படத்தில் நடித்து வரும் ஜாக்கி ஷெராப், இயக்குனரும் தயாரிப்பாளருமே தனது எஜமானர்கள் என்று கூறினார். #PandiMuni #JackieShroff #KasthuriRaja
    இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ஜாக்கி ஷெராப் தமிழில் ஆரண்ய காண்டம், மாயவன் படங்களுக்கு பிறகு கஸ்தூரி ராஜா இயக்கும் பாண்டி முனி படத்தில் அகோரி வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பில் அவர் அளித்த பேட்டி:-

    டைரக்டர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புது மாதிரியான வேடமாக இருக்கும் என்று நினைத்து சம்மதித்தேன். டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன்.

    நான் அடிக்கடி சென்னை வருவேன். 1980-ல் நடிகர்-நடிகைகளின் சந்திப்பு நடக்கும் போது எல்லாம் வருவேன். ஒவ்வொரு நடிகர்-நடிகைகளும் அவரவர் வீட்டிலிருந்து இட்லி, சாம்பார், ரசம் என்று எடுத்து வந்து பரிமாறி அசத்தி விடுவார்கள். ரேவதி, ராதிகா எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள். இப்போது உள்ள நடிகைகள் பெயர் கூட எனக்கு தெரியாது. நான் அதிகம் படங்கள் பார்ப்பது கிடையாது. என்னை பொருத்தவரை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தான் என் எஜமானர்கள். ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் என்னை உட்புகுத்தி அதற்கு சம்பளம், உடை, சாப்பாடு கொடுக்கிற அவர்களை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்’.

    இவ்வாறு ஜாக்கி ஷெராப் கூறினார். #PandiMuni #JackieShroff #KasthuriRaja

    கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் - ஆசிப் - மேகாலி நடிப்பில் உருவாகி வரும் பாண்டிமுனி படத்தின் முன்னோட்டம். #PandiMuni
    தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் பாண்டிமுனி. இந்த படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் நடைபெற்றது.

    இந்த படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.

    ஒளிப்பதிவு - மது அம்பட், இசை - ஸ்ரீகாந்த் தேவா, கலை - ஸ்ரீமான் பாலாஜி, நடனம் - சிவசங்கர், சண்டைப்பயிற்சி - சூப்பர்சுப்பராயன்,  எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கஸ்தூரி ராஜா.

    படம் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும் போது,

    இது ஒரு பயங்கரமான ஹாரர் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது, ஆச்சர்யமான ஒரு சம்பவம் ஒன்று நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் வருஷம் பழமையானது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். 

    அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தினோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய்விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. 
    அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை என்றார். #PandiMuni

    கஸ்தூரி ராஜா இயக்கத்தில் `பாண்டிமுனி' படம் உருவாகி வரும் நிலையில், படப்பிடிப்பின் போது சில ஆச்சரியமான சம்பவங்கள் நிகழ்ந்தது படக்குழுவை அதிசயிக்கச் செய்துள்ளது. #PandiMuni
    கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகும் பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.

    படம் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும் போது,

    இது ஒரு பயங்கரமான ஹாரர் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது, ஆச்சர்யமான ஒரு சம்பவம் ஒன்று நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் வருஷம் பழமையானது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். 

    அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தினோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய்விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. 
    அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை. 

    கோயிலை சுற்றியுள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம், கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமானது. ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இணைய உள்ளார் என்றார். #PandiMuni

    ×